Tuesday, 13 January 2026

பழமொழி, விடுகதைகள் மூலம் வாய்மொழி இலக்கியம்

வாய்மொழி இலக்கியத்தில் காணப்படும் மற்றொரு வகை பழமொழி, விடுகதை ஆகியவை ஆகும். உலக மொழிகள் எல்லாவற்றிலும் இந்த வகைகள் காணப்படுகின்றன. இவை உரைநடையில் அமைந்த வடிவங்கள். 

ஒரு கருத்தைச் சொல்லுவது இவற்றின் நோக்கமாகும். இரண்டும் மனித இனத்தின் வாழ்க்கை அனுபவத்தின் அடிப்படையில் தோன்றிய இலக்கிய வகைகளாகும். பழமொழி பெரும்பாலும் ஒரு வாக்கியத்தில் அமையும். செறிவும், சுருக்கமும் இதன் அடிப்படைப் பண்புகள். நீதி சொல்லுவது இதன் நோக்கம்.

பழமொழி:

பழமொழி தாம் பெற்ற அனுபவத்தைக் கேட்பவருக்குச் சொல்லி, அவருக்கு வழிகாட்டுவதற்காக அமைந்த அனுபவமொழி தொல்காப்பியத்தில் மூதுரை என்ற பெயரில் இது இடம் பெறுகிறது. எனவே. அதற்கு முன்னரே வாய்மொழி மரபில் பழமொழி இடம் பெற்றிருந்தது என அறியலாம்.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பழமொழி என்ற பெயரிலே ஒரு நூல் உள்ளது. ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழி இடம் பெற்றிருக்கும். மேலும் அநேகமாக எழுத்திலக்கியங்கள் அனைத்திலும் பழமொழி இடையிடையே காணப்படுகிறது.

 (கேட்பவருக்கு நீதி சொல்லுவது இதன் அடிப்படை நோக்கம் என்று முன்னர்ப் பார்த்தோம். பிற்காலத்தில் ஒளவையார், பாரதியார் போன்றோர் பாடிய ஆத்திசூடி இதன் மற்றொரு வடிவம் என்று கூறலாம்.

விடுகதை: புதிர்

விடுகதை ஒரு கேள்வியை எழுப்பி அதற்குப் பதில் சொல்லுவது போல அமைந்திருக்கும். ஒருவகையில் இது உரையாடல், வினாவிடை என்றும் இதைக் கூறலாம். புதிர் என்றும் அழிப்பான் கதை என்றும் இது கூறப்படுகிறது. வாழ்க்கையில் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் ஒரு கருத்தைக் கூறுவது இதன் நோக்கமாகும். பழமொழி போல நேரடியாக ஒரு தொடராக அமையாமல், கேள்வியும் பதிலுமாக இது இருக்கும். கேள்வி வடிவில் விடுவிக்க முடியாதபடி முதல் பகுதி அமைந்திருக்கும். அதைக் கேள்வி கேட்பவர் எழுப்புவார். இதற்கு விடுகதை போடுதல் என்று பெயர்.

 எதிரிலிருப்பவர் இந்தக் கேள்வியை நன்கு யோசித்துப் பதில் கூற வேண்டும். தெரியாவிட்டால், கேள்வி கேட்பவரே பதில் கூறி எதிராளியை வியப்பில் ஆழ்த்துவார். ஒருவகையில் மனிதனின் அறிவுக் கூர்மையைச் சோதிப்பதற்காக விடுகதை போடப்படுகிறது என்று கொள்ளலாம். கிராமப்புறங்களில் பொழுது போக்கை மையமிட்டு இது உருவாகி இருக்கும். விடை கூற முடியாத வினாவை எழுப்பி, கேட்பவரைச் சிந்திக்கவைத்து, விடை கூறச் செய்வது இதன் நோக்கமாகும்.

பழமொழி, விடுகதைகளின் வகைகள்

பழமொழி, விடுகதை இரண்டும் வாய்மொழி இலக்கிய வகைகள், எனவே வாய்மொழி இலக்கிய மரபிற்கேற்ப, வட்டாரப் பண்பிற்கும், சாதி வேறுபாடுகளுக்கும் ஏற்ப இவை அமையும், எனவே இவைகளைத் தொகுத்து ஆராய்பவர்கள், வட்டாரம், சாதி அடிப்படையில் இவற்றை வகைசெய்தனர். அதற்கடுத்த நிலையில் தொழில், சமயம், கலை, பழக்க வழக்கங்கள் என்ற பல்வேறு அடிப்படைகளில் இவற்றை வகைப்படுத்தினர்.

கனஆய்வு செய்து பழமொழி, விடுகதைகளைத் திரட்டிய ஆய்வாளர்கள் தங்களுடைய தேவைக்கும் நோக்கத்திற்கும் ஏற்ப இவற்றை வகைப்படுத்தினர். பழமொழி விடுகதை இரண்டும் கேட்பவரை மையமிட்டு அமைந்தவை. எனவே அதற்கேற்ற மொழிக் கூறுகளை உரையாடல் பண்புகளைக் கொண்டிருக்கும். எனவே இந்த அடிப்படையிலும் வகைப்படுத்தலாம்.

பெரும்பாலும் பேச்சு வழக்கு மொழியை அடிப்படையாகக் கொண்டு இவை அமையும். அதனாலே சாதி,வட்டாரக் கிளைமொழிப் பண்புகள் இவற்றில் காணப்படும். எனவே எழுத்திலக்கிய மரபில் காணப்படும் செவ்வியல் மரபுகளை, மொழி உட்பட எதையும் காண முடியாது. வாய்மொழி இலக்கியத்திலிருந்துதான் புலவர்களால் செவ்வியல் இலக்கிய மரபுகள் உருவாக்கப்பட்டன; இலக்கண விதிகள் ஏற்படுத்தப்பட்டன என்பதை நாம் மறக்கக் கூடாது.

வினாவிடை அமைப்பில் காணப்படும் விடுகதை, ஒரு தொடராக அமையும் பழமொழி இரண்டும் கருத்தை அடிப்படையாகக் கொண்டவை. எனவே சொல்லப்படும் கருத்தின் அளவிற்கேற்ப வடிவம் அமையும். சிறியதாகவோ நீண்டதாகவோ அமைந்திருக்கும் பழமொழி, விடுகதைகளை அளவின் அடிப்படையில் வகை செய்ய முடியாது. கருத்தும் சொல்லுபவன் மனோதர்மமும் மட்டுமே அளவை முடிவு செய்யும்.

அதில்தான் இவற்றின் படைப்பாற்றல் உள்ளது. ஒரே பழமொழி, விடுகதை, சாதிக்கேற்ப அல்லது வட்டாரத்திற்கேற்ப மாறுபடும். இந்த மாறுபாடு ஒருசில சொற்களில் அமைந்திருக்கும். எனவே வகைப் படுத்துவோர் இந்த நுட்பத்தை மனங்கொண்டு பகுக்க வேண்டும். பொதுவாக வாய்மொழி இலக்கியங்களைப் பாகுபாடு செய்யும்போது தம்முடைய நோக்கத்திற்கேற்ப, பாகுபாட்டின் அடிப்படைகளை ஒரே சீராக வைத்துக் கொள்ள வேண்டும். இதை மட்டும் கவனத்தில் கொண்டால் போதுமானது.

பழமொழி, விடுகதைகளின் அடிப்படை

பழமொழி, விடுகதை இரண்டும் உரைநடையில் அமைந்தவை என்று மேலே கண்டோம். பழமொழி கருத்தைக் கூறுவதை முதன்மையாகக் கொண்டது: தொடராக, வாக்கியமாக அமையும். எனவே கருத்தை முதன்மையாகக் கொண்டு.

அதற்கேற்பச் சொற்களைப் பயன்படுத்தும் ஓர் இலக்கிய வகை அது. கேட்பவனுக்குக் கருத்து மனதில் பதியுமாறு வெளிப்படையாகச் சொல்லுவது இதன் அடிப்படையாகும். அதனால், குறிப்பாக மறைத்துக் கூறும் உத்திகள் இதில் இடம் பெறா. நேரடியாக முகத்தில் அறைந்தால் போல், கருத்தை வெளிப்படுத்துவது இதன் பண்பாகும்.

பொழுது போக்கிற்குரிய இலக்கியக் கூறுகள், பழமொழியில் இடம் பெறா. பிற்காலத்தில் பழமொழி நானூறு என்று செவ்வியல் இலக்கியமாக எழுதப் பட்டபோது, அதில் கற்பனை, அணிநலம். உவமை போன்ற இலக்கியக் கூறுகள் இடம் பெற்றன. வாய்மொழி மரபிலிருந்து வளர்ந்த புலமைக் கூறுகள் இவை விடுகதை, வினாவும் விடையுமாக அமையும்.

வினாவிற்குரிய பகுதி நீண்டதாக அமையும். விடை மிகச் சுருக்கமாக அமையும். கருத்து கூறுவது அடிப்படை என்றாலும் அதை வெளிப்படையாக இல்லாமல் மறைத்துக் கூறுவது விடுகதை. விடுகதை போடுபவரின் அறிவுத்திறனைக் காட்டுவதற்காகவும், கேட்பவர் அவ்வளவு சுலபமாக எளிதில் விடை காண முடியாதபடி சிக்கலானதாகவே வினா இதில் அமையும்.

விடுகதை போடுபவரின் புத்திக் கூர்மையைக் காட்டுவதும் விடுகதையில் உள்ள புதிரை விடுவித்து விடை கூற முடியாமல் எதிராளி திணறுவதுமாக அமைப்பது விடுகதையின் சிறப்பாகும்.

பிற்காலத்தில் எழுத்திலக்கியத்தில் வினா-விடையாக அமையும் அம்மானை, சாழல் போன்ற இலக்கியவகைகள்,இதிலிருந்து உருவானவை. வினா-விடைப் பண்பே இவற்றில் முதன்மையாக அமைந்தது. சிலப்பதிகாரத்தில் அம்மானை இடம் பெற்றது. திருவாசகத்தில் சாழல் இடம் பெற்றது. இவ்வாறு நாட்டுப் புற இலக்கிய வகைகள் செவ்வியல் (எழுத்து) இலக்கியம் தோன்ற முன் மாதிரியாக அமைந்தன.


காகங்களும் மற்றும் ஆந்தைகளும்

 பெரிய ஆலமரம் ஒன்று இருந்தது அந்த ஆலமரத்தில் காக்காக்களின் அரசனான வாமனன் என்ற ஒரு காகம் காக கூட்டத்துடன் வசித்து வந்தது. அந்த ஆலமரத்தின் அருகாமையில் ஒரு குகை ஒன்று இருந்தது. அந்த குகையில் ஆந்தைகள் வசித்து வந்தன. அந்த ஆந்தைகளின் அரசன் சோமனன் என்ற ஆந்தை எனது அந்த ஆந்தை கூட்டத்திற்கு அரசராக இருந்தது.

காக்கைகளுக்கும் ஆந்தைகளுக்கும் இடையில் ஆந்தைகள் ஆனது காகங்களின் மீது பெருமளவில் கோபமாகவும் வன்மையாகவும் இருந்தது. இதன் மூலமாக ஆந்தைகள் கூட்டமானது இரவு நேரங்களில் சில காகங்களை தினமும் கொன்று வந்தன. 

ஏன் இரவு நேரங்களில் கொள்கிறது என்றால் குழந்தைகளுக்கு இரவு நேரங்களில் மட்டுமே நன்றாக பார்க்க முடியும். ஆனால் காகங்களால் இரவு நேரங்களில் அவ்வாறு பார்க்க முடியாது. இவ்வாறு குழந்தைகள் கூட்டமானது ஒவ்வொரு இரவும் காகங்களை கொன்று வந்து கொண்டிருந்தது. 

ஒரு நாள் காகங்களின் அரசனான வாமனன் தன் காகம் கூட்டம் குறைவதை கண்டுபிடித்து விட்டான். இதனால் அவன் மிகவும் துன்பத்திற்கு ஆளான. உடனே வாமனன் தனது அரசவையில் உள்ள நம்பிக்கை உள்ள அமைச்சர்களுக்கு கூட்டம் கூட்டி அவசரமாக வர வைத்தது. காகங்களின் அமைச்சர்கள் கூட்டத்திற்கு வந்தவுடன் அந்த அமைச்சர்களிடம் காகமானது இதுபோல் நம்முடைய காகக்கூட்டமானது குறைந்து கொண்டே வருகிறது இதற்கு என்ன செய்யலாம் என்று அனைத்து அமைச்சர் காகங்களிடமும் ஆலோசனை கேட்டது. 

உடனே அரச காகத்திற்கு ஒரு தகவல் கிடைத்தது. ஆந்தைகளால் தான் நமக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று தெரிந்து கொண்டது. உடனே அரச காகமானது இரவு நேரங்களில் நம்மால் பார்க்க முடிவதில்லை. இதனை தெரிந்த ஆந்தைகள் இரவு நேரங்களில் வருகின்றன என்பதை அறிந்து கொண்டது. உடனே அமைச்சர்களிடம் கூறியது. பிறகு பகல் பொழுதில் அவை எங்கே ஒளிந்து இருக்கின்றன என்று நமக்கு தெரிவதில்லை. அதனால் நாம் சண்டை மற்றும் சமாதானம் இடத்தை மாற்றுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தல் அல்லது நட்பு உறவு கொள்ளுதல் அல்லது வஞ்சகமாக ஏமாற்றுதல் இவ்வழிகளில் நாம் ஏதாவது ஒரு வழியை பின்பற்றலாம் என்று கூறியது. அமைச்சர்களிடம் நான் கூறியதில் எது சரியாக இருக்கும் என்று ஒருவர் ஒருவராக எடுத்துரைக்க வேண்டும் என்று கூறியது. 

மொத்தமாக ஐந்து அமைச்சர்கள் இருந்தனர். இந்த ஐந்து அமைச்சர்களும் ஒவ்வொரு வழியாக பேசத் தொடங்கினர்.

ஒரு அமைச்சர் காகம் ஆனது அரசரே வலிமையான எதிரியுடன் நாம் போர் புரிவது நமக்கு நல்லதில்லை என்று கூறியது. அந்த கூட்டத்தின் அரசனான சோமனன் மிகவும் வலிமை உடையவன் மற்றும் நமக்கு கண்கள் சரியாக தெரியாத நேரத்தில் அவன் நம்மை தாக்குகிறான் என்று கூறியது. எனவே நாம் அவர்களுடன் சமாதானம் மேற்கொள்வது தான் சரியாக இருக்க வேண்டும் என்று முதல் அமைச்சர் காகம் கூறியது.

அடுத்ததாக அரசன் அடுத்த அமைச்சரை பார்த்து உங்களுடைய கருத்துக்களை நீங்கள் கூறுங்கள் என்று கேட்டது. 

இரண்டாவதாக உள்ள அமைச்சர் காகமானது அரசரே ஆந்தைகள் கூட்டமானது மிகவும் மோசமானது மற்றும் அந்த ஆந்தைகள் கூட்டத்துடன் நாம் சமாதானம் செய்வது நமக்கு நீண்ட நாள் நிலைக்காமல் இருக்கும் என்று கூறியது. மேலும் நாம் அவற்றுடன் எதிர்த்து போரிட்டால் மட்டுமே நாம் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று கூறியது. 

அடுத்ததாக அரசர் மூன்றாவதாக உள்ள அமைச்சரை பார்த்து உங்களுடைய அபிப்பிராயம் என்ன என்று கேட்டது. 

அரசரே ஆந்தைகள் கூட்டம் எனது மிகவும் மோசமானது மிகவும் பேராசை கொண்டது மேலும் ஆந்தைகள் கூட்டம் ஒழுக்கம் இல்லாதது என்று கூறியது. எனவே நாம் ஆண்டுகள் கூட்டத்துடன் சமாதானம் செய்ய முடியாது மேலும் நமது கூட்டமானது மிகவும் பலவீனமாக இருப்பதால் ஆந்தைகள் கூட்டத்துடன் எதிர்த்து போரிடவும் முடியாது அதனால் நாம் நமது கூட்டத்துடன் வேறொரு இடத்திற்கு சென்று அங்கு போய் நிம்மதியாக வாழலாம் இதுவே நமக்கு நல்லது என்று கூறியது. 

அடுத்ததாக அரசர் நான்காவதாக உள்ள அமைச்சரை பார்த்து உங்களுடைய கருத்துக்கள் என்ன என்று கூறினார். 

உடனே நான்காவது அமைச்சர் காகம் ஆனது அரசரே மேலே கூறப்பட்டுள்ள மூன்று கருத்துகளும் எனக்கு சரியாக படவில்லை. நாம் ஏன் குறைகளை போல வேறு ஒரு இடத்திற்கு சென்று அங்கு வாழ வேண்டும். நாம் இங்கேயே இருந்து கொண்டு நம்மைச் சுற்றி ஒரு பாதுகாப்பு அரண் அமைத்துக் கொண்டு ஆந்தைகளுக்கு தொல்லை கொடுப்போம் என்று நான்காவது அமைச்சர் காகம் கூறியது.

அரசர் காகம் ஆனது ஐந்தாவது ஆக உள்ள அமைச்சர் காகத்தை பார்த்து நீ என்ன யோசிக்கிறாய் என்று கேட்டது. 

ஐந்தாவது அமைச்சருக்காகமானது அரசரே நீங்கள் தெரிவித்த ஆறு வகையான நடவடிக்கையில் நாம் நட்பு கொள்வது மிகவும் சரியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் என்று கூறியது. நாம் பலவீனமாக இருப்பதால் நாம் நம்மை விட பலம் இருப்பவர்களிடம் சென்று நட்புக் கொள்வது மற்றும் உதவியை நாட வேண்டும் என்று ஐந்தாவது காகம் கூறியது. 

அரசர் காகம் ஆனது உங்களுடைய கருத்துகளுக்கு என்னுடைய நன்றி. நீங்கள் சொன்ன கருத்துகளுக்கு நான் சிந்தித்து என்ன செய்யலாம் என்பதை நான் பிறகு கூறுகிறேன் இப்போது நீங்கள் அனைவரும் உங்களுடைய இடத்திற்கு செல்லலாம் என்று அரசர் காகம் மற்ற  அமைச்சர் காகங்களை அனுப்பி வைத்தது.

உடனே அரச காகம் தன் தந்தையிடம் நம்பிக்கையாக இருந்த ஒரு முதிய காகத்திடம் சென்று நான் ஒரு சோதனைக்காக தான் உங்கள் முன்பு அமைச்சர்களின் கருத்துக்களை கேட்டேன். நீங்களும் அமைச்சர்கள் சொன்ன கருத்துக்களை கேட்டீர்கள் நான் எதை பின்பற்ற வேண்டும் எனக்கு நீங்கள் கூற வேண்டும் என்று அரசர் காகம் கேட்டது. 

உடனே அந்த முதிய காரணமானது மன்னா நீதி நெறிப்படி அமைச்சர்கள் கூறிய அனைத்து அபிப்பிராயமும் சரியாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்த சூழ்நிலையில் நான் நமக்கு எது நல்லது என்று நினைக்கிறேன் என்றால் நயவஞ்சகம் புரிவதுதான் சரியாக இருக்கும் என்று கூறியது. தந்திரத்தால் நம்மால் நம்மை விட எதிரியை கூட சுலபமாக விட்டு விடலாம் என்று கூறியது. நீங்கள் அவர்களது பலவீனம் என்ன என்று அறிந்து கொண்டு சமயம் பார்த்து ஆந்தைகளை கொன்று விடுங்கள் என்று கூறியது. 

உடனே அரசர் காகம் ஆனது புதிய காகத்தை பார்த்து ஆந்தைகளின் தலைவன் எங்கே இருக்கிறான் என்று எனக்கு தெரியாதே என்று அவரிடம் கேட்டது. 

புத்திசாலித்தனமாக நீங்கள் போய் தினமும் கண்காணித்துக் கொண்டே இருந்தால் அவர்களை கண்டுபிடித்து விடலாம் என்று வயதான காகம் கூறியது. 

அரசருக்காக மனது சிறிது நேரம் கழித்து காக்கைகளுக்கும் குழந்தைகளுக்கும் பகை உண்டாக என்ன காரணமாக இருக்கும் என்று கேட்டது. 

அதற்கு அந்த வயதான காகமானது நான் உண்மை கதை என்னவென்று கூறுகிறேன் என்று சொல்லத் தொடங்கியது. 

இந்த கதையை நீங்கள் தொடர்ந்து படிக்க வேண்டும் என்றால் வலைதள பக்கத்தை தொடருங்கள்....

கதைகள் மூலம் வாய்மொழி இலக்கியம்

வாய்மொழி இலக்கியத்தில் மற்றொருவகை, கதைகள், தனிமனிதனுடைய உணர்வு, சிக்கல்கள் ஆகியவற்றைக் கூறும் கதைகள், குடும்ப வாழ்வை மையமிட்டவை, சமூகம் சார்ந்த கதைகள் (சான்றாக ஓர் இனம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் குடி பெயர்ந்ததைக் கூறும் கதைகள் - கி.ராஜநாராயணின் கோபல்ல கிராமம்), பாலியல் கதைகள், வீரநீர சாகசக் கதைகள், தெய்வக் கதைகள் என்று பலவகைப்படும்.

ஒரு கருத்தைக் கூறுவது இக்கதைகளின் அடிப்படை நோக்கம் நீண்ட காலமாக இக்கதைகள் வாய் மொழியாகவே வழங்கி வருகின்றன. குறிப்பிட்ட ஒருவரால் படைக்கப்படாமல், அவ்வப்போது இட்டுக் கட்டப் பட்டவை இவை.

வாய்மொழி இலக்கியத்திற்குரிய நாம் முன்னர்பார்த்த அத்தனை பண்புகளும் இதற்கும் பொருந்தும். தொடக்க காலத்தில் மனிதன் சேர்ந்து வாழும் போது, பொழுதுபோக்கவும், நீதி கூறவும் இத்தகைய கதைகளை உருவாக்கி இருப்பான். கதைகள், வாய்மொழியாக இடம்விட்டு இடம் பரவி இருக்கும்.

கதைகள், ஆய்வாளர்களால் தொகுக்கப்பட்டு நமக்குக் கிடைத்துள்ளன. இக்கதைகளை எழுத்திலக்கிய உரைநடைக் கதைகளுக்கான முன்னோடி என்று நாம் கொள்ள வேண்டும். வாய்மொழிக் கதைகளிலுள்ள உத்தி, கதை கூறும் முறை, வடிவம், உள்ளடக்கம் போன்றவை எழுத்திலக்கியக் கதைகளுக்கு முன் மாதிரியாக விளங்குபவை.

எனவே திறனாய்வில் இவற்றை ஒப்பிட்டுப் படிப்பதற்கு நாம் தெரிந்து கொள்ள வேண்டும். கதை கேட்பதும் கதை சொல்லுவதும் மனிதமனத்தின் இயல்பாகும். வெளிப்படையாகச் சொல்ல முடியாத அடிமன உணர்வுகளை வெளியிடுவதற்கு வாய்மொழி இலக்கியம், குறிப்பாகக் கதைகள் ஏற்ற வடிவமாகும். எனவே, கதைகளை இந்த நோக்கில் பயன்படுத்தினர்.

கதைகளின் வகை

வாய்மொழிக் கதைகளைப் பல்வேறு வகைகளாக அவற்றின் தன்மைநோக்கிப் பகுத்துள்ளனர். சில கதைகள் அளவில் நீண்டவையாக அமையும். உரைநடை வடிவில் அமையும் கதைகள் மட்டுமே இங்கு பேசப்படுகின்றன. பாடல் வடிவில் அமைந்த கதைகள் உள்ளன.

அவை கதைப்பாடல்கள் (Ballad) என்று வழங்கப் படும். பழைய காலக் காப்பியம், புராணம், இதிகாசம் போன்றவை அவை. அவைகளிலும் கதை இருப்பினும், பாடலும் கதையும் கலந்ததால் அவை கதைப்பாடல் எனப்பட்டன. எனவே, கதைப்பாடல் தவிர்த்த ஏனைய உரை நடையில் கதைகளையே நாம் இங்குக் கவனத்தில் அமைந்த வாய்மொழிக் கொள்ளுகிறோம்.

 இக்கதைகள் பொழுதுபோக்கை மையமிட்டு இருந்தாலும் அடிப்படையில் ஒரு கருத்தைக் (நீதியை) கூறுபவை, பொதுவாக வாய்மொழிக் கதைகள் யாவும் நீதி சொல்லும் நோக்கத்தில் அமைந்தவை. அளவில் மிகக் குறுகிய சின்னஞ்சிறிய கதை முதல் நீண்ட அளவிலான கதைகள் வரை இவை பல திறத்தன.

கதை கூறும் முறையில் முன்னே இருக்கும் கதை கேட்பவர்களை மனத்தில் கொண்டு அவர்களுக்குக் கதை கூறுவது போன்ற முறையில் இவை அமைந்திருக்கும். கதையைக் கூறும் ஒருவர் கதைசொல்லி ஆகிறார். எனவே, அதற்கேற்பக்கதை கூறும் உத்திகள் கதை முழுவதிலும் காணப்படும்.

இகதைகளுக்குக் குறிப்பிட்ட இலக்கணம் கிடையாது அளவில் நீண்ட கதைகள், கதை கூறும் முறையில் கதைக்குள் கதை என்னும் உத்தியைக் கொண்டிருக்கும். இக்கதைகளில், விலங்கு, தேவைதைகள், கடவுளர், மனிதர் எனப்பலரும் கதை மாந்தர்களாக இடம் பெறுவர். எனவே கதை மாந்தர் அடிப்படையில் விலங்குக் கதை, கடவுளர்கதை என்று வகைப்படுத்தவும் கூடிய முறையில் இவை இருக்கும். கதையின் உள்ளடக்கம், கதை மாந்தர், கதையின் அமைப்பு (உருவம்) என்ற அடிப்படைகளில், இக்கதைகள் ஆய்வாளர்களால் வகைப்படுத்தப்படுகின்றன.

கதைகளின் பகுப்பு

வாய்மொழிக் கதைகள், பல்வேறு வகை சார்ந்தவை என்று மேலே பார்த்தோம். இவற்றின் அடிப்படை நோக்கம் கருத்தைக் கூறுவதும் பொழுது போக்கிற்குப் பயன்படுவதுமாகும். கதைகள் அளவில் நீண்டதாகவும், சிறியதாகவும் அமைந்துள்ளன. கதைகள் பல்வேறு விதமான உள்ளடக்கத்தைக் கொண்டவை.

எனவே உள்ளடக்கம், கதையின் அளவு என்ற அடிப்படைகளில் இவை வகைப் படுத்தப்பட்டு வருகின்றன. சில கதைகள், நேரடியாகக் கருத்தைக் கூறும்; சில குறிப்பாகக் கருத்தைக் கூறும். எனவே, கருத்துக் கூறும் முறையில் இவை பகுக்கப்படலாம்.

வாய்மொழிக்கதைகளில், மனிதர் அல்லாத விலங்குகள், பறவைகள், தேவதைகள், கடவுளர் போன்றோர் மாந்தர்களாக இடம் பெறுவர்.இவ்வகைக் கதைகளில் காட்டப்படும் வாழ்க்கையும் நிகழ்வுகளும் 95 கருத்தைக் கூறவே பயன்படுத்தப்படும்.

 வழக்கத்திற்கு மாறான இத்தகைய கதை மாந்தர்களைக் கொண்டு கதைசொல்லி ஒரு கருத்தையே கூறுகிறான். எனவே இக்கதை மாந்தர்கள் மனிதர்களுடைய வெவ்வேறு பண்புகளையே உருவகித்து நிற்கின்றனர். வாய்மொழிக் கதை மரபில் இது ஒரு வகை. சில கதைகளில் உலகம் தோன்றிய காரணம், உலக முடிவு போன்ற கற்பனைகள் இடம் பெறும்.

 இப்பகுதிகள், நம் மொழியிலுள்ள எழுத்திலக்கியமான புராணங்களிலும் உலகத் தோற்றம், உலக முடிவு என்பவைகளாக இடம் பெறும்,வாய்மொழிக் கதை மரபிலிருந்து இக்கூறுகளைப் புராண ஆசிரியர் பெற்றுள்ளனர் என அறியலாம். புராணங்கள் யாவும் சூத முனிவர் மாணவர்களுக்குக் கதை சொல்வதாகவே உள்ளன. இதுவும் வாய்மொழிக் கதை மரபு. சூதர் கதை சொல்லியின் அடையாளம். இவ்வாறு எழுத்திலக்கிய மரபுகள் வாய்மொழி இலக்கிய மரபுகளை எந்த அளவிற்கு பெற்று செழுமைப்படுத்திக் கொண்டுள்ளன என ஒப்பிட்டு அறியலாம்.

கலைகள் சார்ந்த பாடல்கள் மூலம் வாய்மொழி இலக்கியம்

 நாட்டுப்புறக் கலைகள் எண்ணற்றவை. அவைகளில் நிகழ் கலை ஒருவகை. பெரும்பாலும் ஆடல்பாடல் மரபுகளைக் கொண்டதாக அவை அமையும். இவைகளில் பாடப்படும் பாடல்கள் வாய்மொழி மரபாக வழங்கி வருகின்றன. அண்மைக்காலமாக ஆய்வாளர்கள் இவற்றைத் தொகுத்தும், ஆய்வு செய்தும் வருகின்றனர்.இப்பாடல்கள், சமயச் சார்புடைய நிகழ்வுகளின் போது, பாடி ஆடி நடிக்கப்பட்டு வருகின்றன. திறனாய்வு நோக்கில் கவிதை வகைகளில் ஒன்றாக இவற்றை நாம் அறிய வேண்டும்.

இப்பாடல்கள் தெருக்கூத்து போன்ற நாடக வகை சார்ந்தவை; வில்லுப்பாட்டு, கணியான்கூத்து, தேவராட்டம், சேவையாட்டம் போன்ற ஆட்டவகை,பாடல் வகை சார்ந்தவை. ஒயிலாட்டம் போன்ற வேறு நிகழ்கலை வடிவம் சார்ந்தவை எனப் பலவாறாக அமையும். இலக்கிய நோக்கில் இவை கவிதை. 

இவை இசைப் பாடல்களாக உள்ளன. பெரும்பாலும், சூழலுக்கு ஏற்பக் கதை தழுவிய பாடல்களாகவும், தனிப்பாடல்களாகவும் இவை உள்ளன. பிற வாய்மொழிப் பாடல் கவிதை மரபிலிருந்து இவை முற்றிலுமாக மாறுபடுகின்றன. நீண்ட பாடலமைப்பு இசை, இலக்கியவகை, கூத்து/நிகழ் கலைமரபுக்கு ஏற்ப அமையும் மொழிப் பயன்பாடு, கதை தழுவிய அமைப்பு என்ற பன்முகத் தன்மைகளை இப்பாடல்களில் காணலாம்.

எழுத்திலக்கிய வகைகள் பலவற்றிற்கும், பிற்கால நாடக, ஆடல் மரபுப் பாடல்களுக்கும் இவை முன்மாதிரியாக உள்ளன. இந்த அடிப்படையில் திறனாய்வு நோக்கில் நாம் இவை பற்றி அறிய வேண்டும். 

கவிதை இலக்கிய வகை எவ்வாறு வாய்மொழி மரபிலிருந்து எழுத்து மரபிற்கு வளர்ச்சி பெற்றது என்பதை இதன் வழி நாம் அறிய முடியும். அத்துடன் இருவேறு கவிதை இலக்கிய வகைகளை ஒப்பிட்டு அவற்றின் தனித் தன்மைகளையும் உணர முடியும்.

கலைகள் சார்ந்த பாடல்களின் வகைகள் 

கலைசார்ந்த பாடல்கள், பல்வேறு வகைகளாகப் பகுக்கப்பட்டுள்ளன. எழுத்திலக்கியக் கவிதைகளை உள்ளடக்கம், உருவம், உத்தி என்ற அடிப்படை கனில் வகைப்படுத்துவது போல இவற்றை வகைப்படுத்த முடியாது. இவை மாறுபட்ட அடிப்படைகளைக் கொண்டது. இப்பாடல்கள் லக்கண மரபிற்குக் கட்டுப்படாதவை. எனவே. கூத்துப்பாடல், ஆட்டப்பாடல், தனி ஒருவர் நிகழ்த்தும் கலை, குழுவினர் நிகழ்த்தும் கலை என்றெல்லாம் நிகழ்முறைக் கேற்ப இப்பாடல்களைத் திறனாய்வாளர் வகைப்படுத்துகின்றனர்.

கூத்து, பழைமையான வடிவமாகும். தமிழின் நாடக வகைகள் அனைத்திற்கும் அது மூல வடிவம்.கூத்து மரபில் எண்ணற்ற பாடல் வகைகள் இடம் பெறுகின்றன. இவையாவும் இசைப்பாடல்கள். ஆடும் முறைக்கேற்ற, தாளச் சந்தங்களை உடையவை. எனவே, கூத்துப்பாடல்களை இந்த அடிப்படையிலே வகைப்படுத்த வேண்டும். சான்றாகத் தாளத்துடன் கூடிய தர்க்கம், தரு போன்ற பாடல்கள் ஒருவகை; தாளமின்றிப் பாடப்படும் விருத்தப்பாடல்கள் ஒருவகை, ஆனால் இரண்டும் இசைப்பாடல்கள்.

பிற்காலத்தில் தோன்றிய தமிழ் இசை நாடகங்கள் அனைத்திலும் தரு, தர்க்கம், விருத்தப்பாடல் வகைகளைக் காணலாம். இவை இசைப் பண்புகளோடு கூடிய கவிதை என்பதை நாம் மறக்கக்கூடாது. குறிப்பிட்ட சூழலில், கதை நிகழ்ச்சிக்கேற்ப, ஒரு கருத்தையோ, ஓர்உணர்வையோ மையமிட்டு இக்கவிதை அமையும்.

அதே நேரத்தில் நிகழ்கலையான கூத்திற்கேற்ப ஒருவரோ அல்லது இருவர் மாறிமாறியோ அல்லது பலர் குழுப்பாடலாகவோ பாடுமாறு வை அமையும். எனவே இக்கவிதையைத் திறனாய்வு செய்யும் ஒருவர் இவை அனைத்தையும் மனத்தில் கொள்ள வேண்டும். கவிதையின் உள்ளடக்கம், மொழி வெளிப்பாடு என்பவை இவைகளைக் கெண்டு கட்டமைக்கப்படும் அதேநேரத்தில் வாய்மொழி மரபிற்கேற்ற இலக்கணத்திற்குள் கட்டுப்படாத கவிதையாக அமையும். அதன் சொற்களே இதைக் காட்டும். வட்டாரத் தன்மையும், சாதிக் கிளை மொழியும், அதன் சொற்களில் வெளிப்படுவதை நன்கு உணரலாம்.

கலைகள் சார்ந்த பாடல்களின் பகுப்பு

கலை சார்ந்த பாடல்களைப் பல்வேறு வகைகளாகத் திறனாய்வாளர் பகுத்துள்ளனர்.இப்பாடல்கள் நிகழ்கலையில் பாடப்படுபவை. ஆட்டஞ் சார்ந்தவை, சமய நிகழ்வுகள் சார்ந்தவை என்று பல்வேறு தன்மையன. பாடப்படும் சூழல், கலையில் அதன்பயன்பாடு, பாடுவோர் என்ற அடிப்படை களில் இவை பகுக்கப்படுகின்றன. பாடல்களுக்கு இலக்கண மரபு இல்லாதது போல, பகுப்பிற்கும் திட்டவட்டமான வரையறை இல்லை. திறனாய்வாளர். தத்தம் தேவைக்கேற்ப, குறிப்பிட்ட சில அடிப்படைகளில், இப்பகுப்பைச் செய்துள்ளனர். பகுப்பிற்கான அடிப்படைகளைத் திறனாய்வுகளில் பதிவு செய்வர்.

மேலே நாம் குறிப்பிட்ட கூத்துப் பாடல்களில் இடம் பெறும் தரு ஒருவகை இசைப்பாடல் அதே நேரத்தில் கதை நிகழ்ச்சிக்கு ஏற்பவும், சூழலுக்கு ஏற்பவும் 1 அப்பாடல் வகை பயன்படுத்தப்படும். கூத்தில் பல்வேறு வகைகளாகத் தரு இடம் பெறும். ஒரு மாந்தர், கூத்தரங்கில் அறிமுகமாகும்போது பாடப்படுவது ஒருவகை (பிரவேசத்தரு -நுழைவுத் தரு) இரு மாந்தர்கள் உரையாடும்போது பாடப்படுவது ஒருவகை (உத்தர பிரதி உத்தரத் தரு). இருமாந்தர்கள் வாக்குவாதம் செய்யும்போது இடம் பெறுவதே தர்க்கத்தரு. இழப்பின் காரணமாக ஒருவர் புலம்புவது புலம்பல் தரு என்று பல்வேறு வகைகளாகத் தரு என்ற இசைப்பாடல் அமைகிறது.

பிற்காலத்தில் தமிழில் தோன்றிய இசை நாடகங்கள் யாவும் இந்தத் தருவகையை ஏற்றன. இசைப்பாடல்களில் ஒருவகையான கீர்த்தனை, இதிலிருந்து தோன்றியது. இசையோடு கூடிய கூத்துப்பாடல் வகை பல்வேறு வகைகளுக்கு அடிப்படையாக அமைந்துள்ளதை இதனால் அறியலாம். சூழலுக்கேற்ற கூத்து நிகழ்வதற்கு ஏற்ப வ்வகைகள் உருவாக்கப்பட்டுள்ளன. திறனாய்வு நோக்கில் கவிதை வகை எவ்வாறு பெருகி வளர்ந்துள்ளது என்று அறிவதற்கு இது உதவும்.

பாடல்கள் மூலம் வாய்மொழி இலக்கியம்

இலக்கிய மரபில், வாய்மொழி இலக்கியமே முதன் முதலாகத் தோன்றியது.உலக மொழிகள் அனைத்திலும் வாய்மொழி மரபு மிகத் தொன்மையானது. எழுத்திலக்கியத்திற்கு முந்தியதான வாய்மொழி இலக்கிய வகைகள், அதற்கான அடிப்படைகள் குறித்து இந்தப் பாடத்தில் அறிய உள்ளோம்.

வாய்மொழி இலக்கியத்தில் காணப்படும் உள்ளடக்கம், உருவம், உத்தி சார்ந்த மரபுகளைப் எந்த அளவிற்கு எடுத்துப் பின்னர் எழுத்திலக்கியப் படைப்பாளர்கள் பயன்படுத்தினர் என்று அறிவது திறனாய்வின் தேவையாகும். அதற்காகவே வாய்மொழி இலக்கியம் குறித்துக் கற்கிறோம்.

வாய்மொழி இலக்கியம் - பாடல்கள்

வாய்மொழி இலக்கியத்தில் பாடல்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. வாய்மொழி 95 படைப்பாளரால் உருவாக்கப்படாதது. இலக்கியம், குறிப்பிட்ட காலங்காலமாக மக்களிடையே வாய்மொழி மரபாகப் பாடப்பட்டு வருவது. செவிவழியாகக் கேட்டுக் கேட்டுப் பாடப்படுவதால், அவ்வப்போது, ஒவ்வொருவராலும் சேர்க்கைகளும், மாற்றங்களும் பெற்றுப் பாடல் மாறியபடியே இருக்கும். குழலுக்கேற்பப் பாடப்படும் தன்மையும் இதற்குக் காரணமாகும்.

மக்கள் பேச்சு மொழியில் இவை அமையும், வாய்மொழி இலக்கிய வகைகள், நாட்டுப்புற மக்களின் சமய மரபு, பண்பாடு, இசைமரபு, பேச்சுவழக்குச் சொற்கள், நாட்டுப்புற இலக்கிய வகைகள் என்பவைகளைக் கொண்டிருக்கும். இப்பாடல்கள் நில அடிப்படையில் வட்டாரப் பண்பைக் கொண்டிருக்கும். அது போலச் சாதிப் பண்புகளையும் கொண்டிருக்கும். எனவே, சாதி வட்டாரத் தன்மைகளுக்கேற்ப வேறுபட்டு அமையும்.

இப்பாடல்கள் சூழல் அடிப்படையில் பாடப்படுபவை. ஒருவராலோ, பலராலோ குழுவினராலோ இவை பாடப்படும். மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை நிகழும் சடங்குகள், வாழ்க்கை நிகழ்ச்சிகளின்போது பாடப்படும் பாடல்கள், சமயப்பாடல்கள், பல்வேறு தொழில் சார்ந்த தொழிற்களப் பாடல்கள், விளையாட்டுப் பாடல்கள், பொழுது போக்குப் பாடல்கள் என்று பலவகையாக வை அமையும், இப்பாடல்கள் யாவும் இசை மரபிற்கு உட்பட்டவை. செவ்வியல் லக்கியங்களுக்குரிய இலக்கணங்கள் இவற்றில் இடம் பெறா.

இப்பாடல்களைத் தொகுத்து வகைப்படுத்தி, வைகளுக்கு விளக்கமும் திறனாய்வும் அறிஞர் கூறினர். இப்பாடல்களைக் கள ஆய்வில் மக்களிடமிருந்து தொகுத்தனர். பாடப்படும்போது அதே சூழலில் தொகுத்து வகைப்படுத்தினர். இப்படித் தொகுத்த ஆய்வாளர்கள் மூலமே நமக்குப் பாடல்கள் கிடைத்தன.

பாடல்களின் வகை

வாய்மொழி இலக்கியப் பாடல்களைப் பல்வேறு வகைகளாக அறிஞர்கள் பகுத்துள்ளனர். தாலாட்டுப்பாடல் முதல் ஒப்பாரிப்பாடல் முடிய மனித வாழ்க்கை நிகழ்வுகள் குறித்த பாடல்களை வகைப்படுத்தி உள்ளனர். தொழிற் களத்தில், தொழில் செய்யும்போது பாடப்படும் பாடல்கள் ஒருவகை, நடவுப்பாடல், ஏற்றப்பாடல், தெம்மாங்கு, கதிரறுப்புப் பாடல் என்று அவை அமையும்.

ஏசல்பாட்டு, கேலிப்பாட்டு என்பனவும் அமையும். திருவிழாக்களிலும் சமயச் தடங்குகளிலும் வழிபாட்டிலும் ஏராளமான பாடல்கள் உள்ளன. சான்றாக, முளைப்பாரி, கும்மி, கோலாட்டம், வருணிப்புப்பாடல் உடுக்கடிப் பாடல், நீண்ட கதைப்பாடல்கள் என்று நாட்டுப்புறச்சமயஞ்சார்ந்த பாடல்கள் அமையும்.

மேலே கூறிய பெரும் பிரிவுகள் அல்லாமல் ஒவ்வொன்றிலும் உட்பிரிவுகள் நிறையக் காணப்படும். நாட்டுப்புற இலக்கியப் பாடத்தில் இதை விரிவாக அறிந்து கொள்ளலாம். கவிதை என்ற இலக்கிய வகையில், வாய்மொழி இலக்கியம் குறித்த வகைப்பாடு.

அதன் அடிப்படை என்ற அளவிலே இதை நாம் தெரிந்து கொள்ளவேண்டும். வாய்மொழி இலக்கிய மரபிலிருந்து, எழுத்திலக்கியம் எந்த அளவிற்கு இலக்கிய மரபுகளைப் பெற்றுள்ளது என்று அறிந்து கொள்ள மட்டுமே நமக்கு இது தேவை. தொல்காப்பியர் பண்ணத்தி, பிசி. முதுமொழி, அங்கதம் போன்ற வாய்மொழி இலக்கிய வகைகளைக் கூறியுள்ளார். 

சங்க அக, புறப் பாடல்களில் வாய்மொழி இலக்கிய மரபுகள் பல இடம் பெறுவதைத் திறனாய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். நம் மொழியில் மட்டுமல்லாமல், கிரேக்கம், வடமொழி போன்ற மொழிகளிலும் இவ்வாறு வாய்மொழி மரபின் செல்வாக்கு இருப்பதை அறிஞர்கள் கூறியுள்ளனர். எனவே திறனாய்வு நோக்கில் ஒப்பிட்டறிய வாய்மொழி இலக்கியம் - கவிதை - குறித்த அறிமுகம் நமக்குத் தேவை.

பாடல்களின் பாகுபாடு

மனித வாழ்க்கையில் இடம் பெறும் நிகழ்வுகள் அடிப்படையில் தாலாட்டு முதல் ஒப்பாரி வரை பாடல்கள் ஒரு வகையாகப் பகுக்கப்பட்டுள்ளன. இப்பாடல்களில் பாடல்கள் போல்வன தாலாட்டு, ஒப்பாரி, திருமணச் சடங்குப் எழுத்திலக்கியத்திலும் இடம் பெற்றுள்ளன. வாய்மொழி இலக்கியத்தில் இலக்கண மரபுகள் இடம் பெறா என்று முன்னர் பார்த்தோம்.

ஆனால் வாய்மொழி இலக்கியச் செல்வாக்கினால் உருவாகும் எழுத்திலக்கியம் இலக்கண மரபுகளோடு படைக்கப்படும். சான்றாக, வாய்மொழி இலக்கியத்திலுள்ள தலாட்டுப் பாடலில் இலக்கண மரபுகளைத் தேட முடியாது. ஆனால், குலசேகர ஆழ்வார் பாடிய தாலாட்டு, பெரியாழ்வார் பாடிய தாலாட்டு, நம்மாழ்வார் தாலாட்டு ஆகியன யாப்பு நெறிக்கு உட்பட்டு அமைந்தவை.

தொழிற்களப் பாடல்களில் பல்வேறு வகையான தொழில்களுக்குரிய பாடல்கள் உள்ளன. உழவுத் தொழில் சார்ந்த நடவுப்பாடல்கள், பள்ளு இலக்கியத்தில் நடவுப் பாடல் தோன்றுவதற்குக் காரணமாக அமைந்தவை. சிலப்பதிகாரத்தில் ஏர்மங்கலம், பொலிக பாட்டு (அறுவடை முடித்து நெல் தூற்றும்போது பாடப்படுவது) போன்ற பாடல் வகைகள்கூறப்பட்டுள்ளன. பாடல்கள் நமக்குக் கிடைக்கவில்லை.

எனவே சிலப்பதிகாரத்திற்கு முன்பு இவ்வகைப் பாடல்கள் வாய்மொழி இலக்கிய மரபிலிருந்து எழுத்திலக்கியம் பெற்ற வகை என்று கூறலாம். தமிழ் இலக்கிய மரபில் இம்மாதிரியான இலக்கிய வகைகள் நிறைய பாடல்களில் முளைப்பாரிப்பாட்டு, கும்மிப்பாடல், உள்ளன. சமயப் கொண்டாட்டப் பாடல் போல்வன எழுத்திலக்கியத்தில் இடம்பெற்றுள்ளன.

சான்றாகக் 'கண்ணுடைய அம்மன் பள்ளு' நூலில் முளைப்பாரிப்பாட்டு, கும்மிப்பாடல் போல்வன உள்ளன. வாய்மொழி இலக்கியத்தில் இருந்து இந்த இலக்கிய வகைகள் தோன்றி, எழுத்திலக்கிய படைப்பாக இலக்கணம் மரபுடன் உறுபெற்றன. பாடு பொருள் பாடப்படும் சூழல் என்ற அடிப்படையில் பெரும்பாலும் வாய்மொழி இலக்கியப் பாடல்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

தனிச் செய்யுள் என்றால் என்ன? அவற்றின் வகைகள் யாவை?

இலக்கண மரபுப்படி எழுதப்படும் செய்யுள், கவிதை என்று அழைக்கப்படுகிறது. செய்யுள் என்பது செய்யப்படுவது என்ற பொருளில் தொல்காப்பியர் காலந்தொட்டு வழக்கத்தில் இருந்து வருகிறது. கவிதை என்ற சொல். பிற்காலத்தில்தான் வழக்கிற்கு வந்துள்ளது.

இன்று, இலக்கண மரபின்படி அமையும் எந்திரமயமான ஆக்கத்தைச் செய்யுள் என்றும், களித்துவம் உடையவை கவிதை என்றும் நாம் வேறுபடுத்திக் கூறுகிறோம். ஆனால், இரண்டு சொற்களும் ஒரே பொருளில் இலக்கண மரபிற்கு உட்பட்டது வழங்கி வருகிறது.

எந்தவிதமான தொடர்பும் இல்லாமல், தனித்தனியாக ஒவ்வொன்றும் அதனதன் அளவில் முழுமையுடையதாக அமையும் கவிதை தனிச் செய்யுள் எனப்படுகிறது. ஒரு கருத்தையோ அல்லது ஓர் உணர்ச்சியையோ வெளிப்படுத்துவதாகக் கவிதை அமையும், சொல், நுட்பமான பொருள், ஓசை, கற்பனை, உணர்ச்சி, வெளியீட்டுத் திறன் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டது கவிதை.

கவிதை என்றாலே யாப்பிலக்கணப்படி அமைந்த மரபுக் கவிதை என்பதை நாம் மறக்கக் கூடாது. கவிதைக்குப் பலரும் பலவிதமான விளக்கங்கள் கூறியுள்ளனர். ஆனாலும், கவிதை என்பது இதுதான் என்ற வரையறுத்த இலக்கணம் இல்லை.

சிறந்த சொற்களைச் சிறந்த வரிசையில் அமைப்பது கவிதை என்று மேனாட்டார் விளக்கம் கூறுகின்றனர். மேலாகப் பார்த்தால் எளிமையும் தெளிவும் விளங்க, உள்ளே ஆழ்ந்து அகன்ற நுண்ணிய பொருளை உடையதாக இருப்பது கவிதை என்று நம் மரபில் கூறுகின்றனர்.

 சுவிதையில் கவிஞன் கூற எண்ணிய பொருள் நுட்பமாக மறைந்து கிடக்கும். வாசகன் தான் அதைத் தேடிக்கண்டு சுவைக்க வேண்டும். தனிச் செய்யுள் - தனிக்கவிதை என்ற இலக்கிய வகை மிகத் தொன்மையானது.

 சங்க - காலம் முதல், இன்றுவரை தனிச்செய்யுள் காணப் படுகிறது. முன்னும் பின்னும் தொடர்பின்றி, ஒரு பாடல் அளவிற்குள்ளாகத் தாம் கூற எண்ணிய கருத்தை (அல்லது உணர்ச்சியை) வெளிப்படுத்துவது இதன் இயல்பு. இதற்கேற்பச் சொல்லும் பொருளும், பிற உறுப்புக்களும் துணை செய்யுமாறு தனிச் செய்யுள் அமையும்.

தனிச் செய்யுளின் வகை

தனிச்செய்யுள், பல்வேறு வகைகளை உடையதாக நம் மரபில் உள்ளது. பெரும்பாலும், உள்ளடக்கப் பொருளை மையமிட்டு, தனிச்செய்யுள் வகைப் படுத்தப்பட்டுள்ளது. தமிழ் இலக்கிய மரபில் சங்ககாலக் கவிதை முதல் இன்று வரை உள்ள கவிதைகள் யாவும் இவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.

சங்ககாலத்தில் அகம், புறம் என்று இருவிதமான கவிதை வகைகள் காணப் பட்டன. காதல் உணர்வு பற்றிய பாடல்கள் அகம் எனவும், ஏனைய அனைத்தும் புறம் எனவும் வகை செய்யப்பட்டன. இந்தப் பாகுபாட்டில், கவிதையின் அடிவரையறை கணக்கில் கொள்ளப்படவில்லை.

சான்றாக, ஐங்குறு நூறு,குறுந்தொகை போன்ற குறைந்த அடிகளையுடைய பாடல்கள் முதல் நீண்ட அடிகளையுடைய அகநானூறு, கலித்தொகை போல்வன. இதே போலத்தான். புறம் என்பதில் புறநானூறு, பதிற்றுப் பத்து என்பவை அமையும்.

பின்னர், நீதி கூறும் பாடல்கள் யாவும் ஒரே வகையாக நீதி இலக்கியம் என்று -கொள்ளப் பட்டது. தமிழ் மரபில் பின்னர் ஏராளமான நீதி நூல்கள் தோன்றின. இவை யாவும் இந்த வகையில் அமைந்துவிடும். மிகப் பிற்காலத்தில் மாயூரம் வேத நாயகம் பிள்ளை பாடிய நீதிநூல் என்பது உட்பட பல கவிதைகள் இவ்வகையைச் சார்ந்தவை.

 சமயப் பாடல்கள் மற்றொரு வகை, சங்ககாலப் பரிபாடல், திருமுருகாற்றுப்படை, பக்தி இயக்க காலக் கவிதை முதல் இன்று பாடப்படும் சமயக் கவிதை வரை யாவும் இவ்வகை சார்ந்தவை. அரசன் புகழ்பாடும் (அரசனுக்கு மாற்றாக இன்று ஆளுபவரைப் புகழ்ந்து பாடும் பாடல்) அரசவைப் பாடல் (court poetry) மற்றொரு வகை. சூழலுக்கு ஏற்பப் பாடப்படும் கவிதைகள் மற்றொரு வகை இவ்வகையில், தனிப் பாடல் திரட்டிலுள்ள பலவகையான பாடல்களைக் குறிப்பிடலாம். இயற்கை வருணனைப் பாடல் மற்றொரு வகையாகும்.

இவ்வாறு நம்மிடமுள்ள கவிதைகளை, அவற்றின் உள்ளடக்க அடிப்படையில் நாம்தான் வகை செய்ய செய்ய வேண்டும். திறனாய்வில் அடிப்படைப் பணி வகைப்படுத்துவதாகும். இந்த வகைப்பாட்டிற்குச் சரியான அடிப்படைகளைத் திறனாய்வாளர் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

தனிச் செய்யுளின் பகுப்பு

காதல் பாடல் என்பது ஒரு வகையில் பெரும் பகுப்பு, சங்ககாலப் பாடல்களிலே. காதல் பற்றிய பாடல்கள், கவிதையின் அடி வரையறைக்கேற்பப் பாகுபாடு செய்யப்பட்டுள்ளது. இப்பாடல்களைத் திணை அடிப்படை, கூற்று அடிப்படை என்றும், உரிப் பொருள் அடிப்படை என்றும் நுட்பமாகப் பகுத்துள்ளனர்.

இன்று இக்கவிதைகளைப் படிக்கும் ஒருவர். பாகுபாட்டிற்கான, காரணங்களை இவ்வாறு விளக்கலாம். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் சில காதல் பாடல்கள் உள்ளன. காதல் பாடல் என்ற வகையில் ஒன்று பட்டாலும், சங்கப் பாடல் மரபிலிருந்து இவை முற்றிலும் மாறுபடுகின்றன.

கவிதைச் சுவை, அழகியல் அனுபவம் என்பவற்றில், சங்கப் பாடல்களில் காணப்படும் கவிதை நயம் இவற்றில் இல்லை. தேவாரம், திவ்யப் பிரபந்தம் ஆகிய சமயப் பாடல்களிலும் சங்ககால அகமரபைப் (காதல் கவிதை மரபை ) பின்பற்றும் பாடல்கள் உள்ளன.

 இவை சமயப் பாடல்கள். சமய அருளியல் அனுபவத்தை (Mystic experience) வெளிப்படுத்துவதற்குக் காதலும் சங்க அக மரபும் வெளியீட்டு உத்திகளாகின்றன. எனவே, இப்பாடல்களைக் காதல் பாடல் என்று வகைப்படுத்த முடியாது.

பிற்காலத்தில் தோன்றிய காப்பியம், சிற்றிலக்கியம், புராணம் ஆகியவற்றிலும் காதல் பாடல்கள் உள்ளன. ஆனால், அவற்றின் தன்மை வேறு. ஒவ்வொன்றிலும் காதல் பாடல் மரபும் போக்கும் வேறுவேறாக உள்ளன. 

இன்றுவரை தோன்றியுள்ள காதல்பாடல்கள் இவ்வாறு வெவ்வேறு வகையாக அமையும். எனவே இவை அனைத்தையும் ஒரே பிரிவாகப் பகுக்க முடியாது. திறனாய்வு செய்வோர் ஒரு குறிப்பிட்ட பாடல் வகையிலே பாகுபாடு செய்வதற்கு எத்தனை வேறுபட்ட களங்கள் உள்ளன என்பதை அறிய வேண்டும்.

 தனிச் செய்யுள் கவிதை என்பதில் ஒரு குறிப்பிட்ட வகையைப் பாகுபாடு செய்வதிலே எத்தனை வேறுபட்ட அடிப்படைகள் உள்ளன என்பதை இதனால் அறியலாம். தனிச் செய்யுள் - கவிதை - என்ற இலக்கிய வகை மிகப்பெரும் பரப்பை உடையது. எனவே வகைப்படுத்துதலிலும் பலவகையாக அடிப்படைகள் தேவை. திறனாய்வாளர் மிகச் சரியான முறையில் இவற்றை வகைப்படுத்த வேண்டும்.

காப்பியம் என்றால் என்ன? அவற்றின் வகைகள் யாவை?

 ஒரு கதையைக் கவிதையில் கூறுவது காப்பியம்) அளவில் நீண்டதாகப் பல்வேறு கிளைக்கதைகளைத் தன்னுள் கொண்டதாக அது அமையும். ஒரு மையக் கருத்தைக் கூறும் நோக்கில் கதை பின்னப்படும். வரலாறு, சமயம், வாய்மொழி மரபு போன்றவற்றிலிருந்து பெற்ற கதையை விரிவாகக்கவிதையில் பாடுவது காப்பியம். பிற மொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டதாகவோ, தமிழிலிருந்து உருப்பெற்றதாகவோகாப்பியம் அமையும்.

கவி செய்வது காவியம் என்று வடமொழியில் இச்சொல் விளக்கப்படுகிறது. தமிழில் காப்பியம் என்பது பழைய சொல். தொடக்கத்தில், தொடர்நிலைச் செய்யுள் என்ற பெயரில் காப்பியம் வழங்கி வந்துள்ளது.

கவிதையில் அமைந்த கதையும், அடிப்படைக்கருத்தும் தொடர்புடைய ஓர் இலக்கிய வகை, காப்பியம் என்று நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். காப்பியத்தின் மையக் கருத்தைப் பாவிகம் என்று கூறினர். கதை நெடுகிலும் பரவி நிற்பது என்பது இதன் பொருள். காப்பியங்கள் தமிழில் சிலப்பதிகாரம் முதல் இன்று வரை ஏராளமான தோன்றியுள்ளன.

அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு உறுதிப் பொருள்களைக் கூறுவது காப்பியத்தின் பாவிகம் என்று இலக்கணம் வகுத்தனர். 'அறம் வெல்லும்; பாவம் தோற்கும்' என்னும் கருத்தை மையமிட்டுச் சில காப்பியங்கள் தோன்றின. புராணம் என்ற பெயரில் பின்னர்த் தோன்றிய இலக்கிய வகையும் காப்பியமாகவே கொள்ளப்பட்டது. இலக்கணமாபுப்படி அமைந்த கவிதையால் படைக்கப்பட்டது. பல்வேறு வகையான கவிதைகளைக் கொண்டு காப்பியம் அமைந்தது.

காப்பியத்தின் வகைகள்

காப்பியம், அதன் அளவு, கதைப் பொருள், கதையின் தன்மை என்ற பல்வேறு அடிப்படைகளில் வகைப்படுத்தப்பட்டது. வாய்மொழி இலக்கிய மரபிலுள்ள கதைப்பாடல், வாய்மொழிக் காப்பியம் என்பவற்றிலிருந்து மாறுபட்டது. செவ்வியல் இலக்கியக் காப்பியம். சில காப்பியங்கள், இதிகாசமென்று (இதிகாசம் -நடந்த கதை) அழைக்கப்பட்டன. வடமொழி மரபில் இராமாயணம், மகாபாரதம் என்பவையும், தமிழில் சிலப்பதிகாரம், பெரிய புராணம் என்பவையும் இதிகாசம் ஆகும்.புராணம் என்ற பெயருடன் காப்பியம் அமைந்தது.

வடமொழி இலக்கண மரபைப் பின்பற்றி, அளவின் அடிப்படையிலும் உறுதிப் பொருள் கூறும் தன்மையிலும், பெருங்காப்பியம், சிறு காப்பியம் என்று வகைப்படுத்தப்பட்டது. சமயக்கருத்துக்களைக் கூறும் காப்பியம், சமயக் காப்பியம் எனப்பட்டது. இது உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாகும். வரலாறு, சமூகம் என்று கதை அடிப்படையில் காப்பியங்கள் பகுக்கப்பட்டன. 

மொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டவை,நேரடியாகத் தமிழிலே தோன்றியவை என்று கதை மூலத்தைக் கொண்டு சில காப்பியங்கள் வகைப்படுத்தப்பட்டன. இந்த வகைப்பாடுகள் அவ்வக்காலத்தில் திறனாய்வாளர்களால் செய்யப் பட்டவை. இதற்கு அடிப்படையான ஒரே தன்மைத்தான காரணம் பின்பற்றப் படவில்லை. மாறாகத் திறனாய்வாளர்கள் தத்தம் நோக்கங்களுக்கேற்ப வகைப்படுத்தினர்.

கவிதை, தனிச் செய்யுள் என்ற நிலையிலிருந்து நீண்ட ஒரு கதையைக் கூறுவதற்குப் பயன்படுமாறு அமைந்தது. படிப்பவருக்குக் கவிதையைச் சுவைப்பதில் சோர்வு ஏற்படாமல் இருக்கவும், கவிதையின் அழகுணர்ச்சி, கதைச் சூழல், உணர்ச்சி, கருத்துக்கூறும் முறை ஆகியவைகளுக்கேற்ப, ஓசை நயமும் சொல் வளமும் பொருள் ஆழமும் உணர்ச்சி வெளிப்பாடும் கொண்ட கவிதைகளால் காப்பியம் படைக்கப்பட்டது. தமிழில் இதற்கு மிகச் சிறந்த சான்று கம்ப ராமாயணம்.

காப்பியத்தின் பகுப்பு

காப்பியத்தின் உள்ளடக்கம், கதை நிகழும் சூழல், மாந்தர் மன உணர்வு. சொல்லப்பட வேண்டிய கருத்து என்பவைகளோடு, வாசகரிடம் ஏற்படுத்த வேண்டிய விளைவையும் மனத்திற் கொண்டு காப்பியக்கவிஞன் தக்க கவிதைகளை உருவாக்குகிறான்.

 ஒரே வகையான யாப்பில் அமைந்த கவிதையாயினும், பல்வேறு வகைக் கவிதைகளாயினும் கவிஞன் அவற்றை மிகச் சரியாகப் பயன்படுத்துகிறான். காப்பியம், எண்ணற்ற தனிச் செய்யுள்களைக் கொண்டது என்பதை நாம் மறக்கக் கூடாது.

சில காப்பியங்களில் வாய்மொழி இலக்கிய மரபிலிருந்து பெற்ற கவிதை வகைகளைக் கவிஞர் பயன்படுத்துவார். எழுத்திலக்கிய மரபிற்கேற்ப அக்கவிதை வடிவம் மாறும். சான்றாகச் சிலப்பதிகாரத்தில் வரிப்பாட்டு (கானல் வரி, வேட்டுவ வரி), குரவைப்பாடல் (குன்றக் குரவை, ஆய்ச்சியர் குரவை) போன்ற வாய்மொழிக் கவிதை வகைகளை இளங்கோ பயன்படுத்தியுள்ளார். காப்பியப் போக்கில் இவை மிகச் சிறந்த விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன.

 மாறாகப் பெரிய புராணம், வில்லி பாரதம், கம்பராமாயணம் போன்ற காப்பியங்களில் ஒரே வகையான யாப்பில் அமைந்த பாடல்களைக் காண்கிறோம். அவைகளின் ஓசை நயமும் சொற்கட்டும், உணர்ச்சி வேகமும் மிகச் சிறந்த பயனைத் தந்துள்ளன. பாஞ்சாலி சபதத்தில் பாரதியார் இவ்விரு மரபுகளையும் போற்றியுள்ளார்.

வாய்மொழிக் கவிதை மரபும் இலக்கணத்தில் அமைந்த செவ்வியல் கவிதை மரபும் ஒன்றிணைந்து படிப்பவரிடம் பாரதி எதிர்பார்த்த விளைவை ஏற்படுத்துகின்றன. எனவே கவிதை, அதைப் படைத்து, மிகச் சரியான முறையில் கையாளும் கவிஞனின் ஆற்றலுக்கேற்ப சிறப்படைகிறது.